சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை- ஒரே ஆண்டில் "நக்சல் இல்லா தேசம்"- அமித்ஷா சபதம்!

6 hours ago
ARTICLE AD BOX

சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை- ஒரே ஆண்டில் "நக்சல் இல்லா தேசம்"- அமித்ஷா சபதம்!

Delhi
oi-Mathivanan Maran
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார். மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதலில் ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து பதுங்கி உள்ள மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிஷா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சில மாவட்டங்களில் மட்டும் தற்போதும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. ஆயுதப் புரட்சியின் மூலம் டெல்லியின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பது மாவோயிஸ்டுகளின் சித்தாந்தம். இது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால் மாவோயிஸ்டுகள் பலவீனமடைந்துவிட்டனர்.

Chhattisgarh maoists

நாட்டின் பழங்குடி மக்களே, மாவோயிஸ்டுகளின் கேடயமாக இருந்தனர்; ஆனால் பழங்குடி மக்களும் வெகுமக்கள் நீரோட்டத்தில் இணைந்துவிட்டதால் மாவோயிஸ்டுகள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.

அதேநேரத்தில் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொத்து கொத்தாக மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சத்தீஸ்கரின் பீஜப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் குழு நடமாடுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெரும் ஏண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் வனப்பகுதிகளுக்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த துப்பாக்கிச் சண்டை மோதல் பல மணிநேரம் நீடித்தது. இம்மோதலில் மொத்தம் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் ரிசர்வ் பாதுகாப்பு படை ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டது பற்றி பெருமிதம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் மாவோயிஸ்டுகள் இல்லாத இந்தியா உருவாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
English summary
22 Maoists Killed in Chhattisgarh Security Forces Operation; One Reserve Security Force Officer Martyred.
Read Entire Article