விண்வெளிக்கு அந்தம்மாகூட ஒரு ஆம்பளையும் போனான்.. அவனை யாருமே கண்டுக்க மாட்டீங்கள்ல!

1 day ago
ARTICLE AD BOX

விண்வெளிக்கு அந்தம்மாகூட ஒரு ஆம்பளையும் போனான்.. அவனை யாருமே கண்டுக்க மாட்டீங்கள்ல!

Memes
oi-Jaya Chitra
Subscribe to Oneindia Tamil

சென்னை : சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பூமி திரும்பியுள்ள நிலையில், ஒவ்வொருவரும் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில், வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்கள் வாயிலாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 286 நாட்களைக் கழித்து விட்டு, நேற்று வெற்றிகரமாக பூமி திரும்பியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அவரது பூர்வீகம் இந்தியா என்பதால், அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் சுனிதாவின் வருகையைக் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.

அதிலும் குறிப்பாக குஜராத்தில் உள்ள அவரது பூர்வீக ஊர் மக்கள், சுனிதா பத்திரமாக பூமி திரும்ப வேண்டும் என யாகம் நடத்தியதில் தொடங்கி, அவர் பத்திரமாக பூமி திரும்பியதும் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவரை ஜமாய்த்து விட்டனர். இப்படி அவர்கள் தங்கள் ஸ்டைலில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நம் குறும்புக்கார நெட்டிசன்களும் தங்கள் ஸ்டைலில் சுனிதாவுக்கு மீம்ஸ்கள் வாயிலாக வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் தினத்தில் மகளிருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பவர்களைப் பார்த்தாலே, 'இந்த ஆண்கள் தினமெல்லாம் உங்க கண்ணுக்கே தெரியாதுல..' என கொந்தளிக்கும் குரூப், இந்த விவகாரத்திலும், 'சுனிதாவை மட்டும் போகஸ் பண்றீங்களே.. அவர் கூடவே இன்னோருத்தரும் இத்தனை நாள் அங்க இருந்தாரே.. அவரைக் கண்டுக்கவே மாட்டேங்குறீங்களே..' என தங்கள் ஆதங்கங்களை மீம்ஸ்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

sunita williams memes
sunita williams memes
sunita williams memes
sunita williams memes
sunita williams memes
sunita williams memes
sunita williams memes
sunita williams memes
sunita williams memes
sunita williams memes
More From
Prev
Next
English summary
These are some jolly memes collection on astronaut sunita williams's return
Read Entire Article