ARTICLE AD BOX
வீட்டை சுத்தமாக பராமரிப்பதே சவாலான காரியம். அதிலும், பாத்ரூமை சுகாதாரமாக வைத்திருப்பது கூடுதல் சவாலாக இருக்கும். அந்த வகையில் பாத்ரூம் பக்கெட், கப் மற்றும் டைல்ஸ் போன்றவற்றை எப்படி சுலபமாக சுத்தப்படுத்தலாம் என்று காணலாம்.
மஞ்சள் கறை நிறைந்திருக்கும் பக்கெட் மற்றும் கப் ஆகியவற்றை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, பல் துலக்க பயன்படும் பேஸ்டை, ஒரு ஸ்க்ரப்பரில் போட்டு கறை படிந்திருக்கும் இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் கறை நீங்கும்.
எனினும், சில சமயம் பக்கெட்டுகளில் அதிகப்படியான கறைகள் இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், பாத்ரூம் கழுவ பயன்படும் ஹார்பிக்கை பக்கெட்டுகளில் ஊற்றியும் கழுவலாம். இவ்வாறு செய்யும் போது பக்கெட்டுகளில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி விடும்.
இதேபோல், பாத்ரூமின் டைல்ஸ்களையும் சுலபமாக கழுவ முடியும். இதற்காக 5 ஸ்பூன் பிளீச்சிங் பொடி, 2 ஸ்பூன் சோடா உப்பு, துணி துவைக்க பயன்படும் சோப்பு பொடி 1 ஸ்பூன் ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்தப் பொடியை பாத்ரூம் டைல்ஸ்களில் தூவி விட்டு, அதன் பின்னர் தேய்த்து கழுவலாம். இப்படி செய்தால் பாத்ரூம் டைல்ஸ்கள் புதியது போன்று மாறிவிடும்.
நன்றி - En Chinnanjiru Ulagam Youtube Channel