ARTICLE AD BOX
மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் விஞ்ஞானி தேவேந்திர பர்லேவாருக்கு நடத்தப்பட்ட மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன் மூலம் அவரது உடலில் 5 சிறுநீரகங்கள் உள்ளன.
47 வயதாகும் விஞ்ஞானியின் உடலில் ஐந்து சிறுநீரகங்கள் இருந்தாலும், ஒன்றுமட்டும்தான் செயல்பாட்டில் உள்ளது.
உலகிலேயே, இதுபோன்று மூன்றாவது முறை மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டிருக்கும் முதல் நபராகவும் இவர் மாறியிருக்கிறார். மருத்துவத் துறையினரும், ஒருவருக்குப் பொருந்தக் கூடிய தானமாக சிறுநீரகம் கொடுக்கும் நபர் கிடைப்பதே அரிது என்பதால், இவருக்கு மூன்றாவது முறையாக மூளைச் சாவடைந்த விவசாயி ஒருவரின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
இவரது உடலில் ஏற்கனவே இருந்த இரண்டு சிறுநீரகங்களும் வேலை செய்யாததால், மூன்று முறை தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடைசியாக பொருத்தப்பட்டிருக்கும் ஒரே ஒரு சிறுநீரகம் மட்டுமே தற்போதைக்கு செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.