ARTICLE AD BOX
பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பை சரி செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
பித்த வெடிப்பு என்பது குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. பாதங்களில் ஓரங்கள் பிளவு பட்டு காணப்படுவது தான் பித்த வெடிப்பு. இந்த பித்தவெடிப்பு ஏற்படுத்தும் வலியை தாங்க முடியாது. இதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நம் முகத்தை பராமரிக்க எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ அதில் கால்வாசி நேரம் ஆவது நம் பாதத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். முகத்தைவிட பாதம் தான் நமக்கு முக்கியமானது. நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்துப் பாருங்கள். பித்த வெடிப்பு ஏற்படும்போது நடப்பது மிகவும் சிரமமாக இருக்கும் அதுவும் வலியை ஏற்படுத்தும். இந்நிலையில் வீட்டிலேயே இயற்கையான முறையில் இந்த பித்த வெடிப்பை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பித்த வெடிப்பை குணப்படுத்த இயற்கையான முறையில் வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இதை பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதுமாக குணமாகும். முந்திரி கொட்டையை நெருப்பில் காட்டி அதிலிருந்து வரும் எண்ணையை பித்த வெடிப்பின் மீது தடவினால் பித்த வெடிப்பு குணமாகும். கண்டிப்பா இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க.