குழந்தைகள் நலன் துறையில் வேலை.. 14 மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகள் அரசு பணி கிடையாது என்பதை அறிவிப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பணியின் விவரங்கள் : தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என 14 மாவட்டங்களில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வயது வரம்பு : குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள சமூக பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயது முதல் 65 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

* விண்ணப்பதார்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் (அல்லது)

* குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://dsdcpimms.tn.gov.in/ என்ற குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சென்னையில் இருக்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ்,
சென்னை – 600 010.

Read more : தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும்..!! – மு.க.ஸ்டாலின் அழைப்பு

The post குழந்தைகள் நலன் துறையில் வேலை.. 14 மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article