ARTICLE AD BOX
பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் படத்திலேயே நல்ல பெயரையும் புகழையும் பெற்றார் பாண்டிராஜ். இதைத்தொடர்ந்து மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக சூர்யா நடிப்பில் இவர் இயக்கியிருந்தா எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யா மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் விஜய் சேதுபதி வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் இதன் காரணமாக இந்த படத்திற்கு ஆகாச வீரன் என்று தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.