ARTICLE AD BOX
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் வாசலில் இந்த ஒரு செடியின் வேரை கட்டினால் பணப்பற்றாக்குறை இருக்காது.

Vastu Tips Tying Tulsi Root On Main Door : சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரின் கனவு. இதற்காக ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கிறார். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பணப்பற்ற குறை ஏற்படுகின்றது. இதற்காக பல பரிகாரங்கள் பூஜைகள் செய்தாலும் முன்னேற்றம் அடைந்தபாடில்லை. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களது வீட்டின் பிரதான வாயில் அல்லது கதவில் இந்த ஒரு செடியின் வேரை மட்டும் கட்டினால் போதும். வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு அதிகரிக்கும். முக்கியமாக பணபற்றாக் குறை வரவே வராது. காரணம் வீட்டில் பிரதான கதவு தான் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய இடம் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் எதிர்பாராத அளவிற்கு பணம் பெருகும். சரி இப்போது அது என்ன செடி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

துளசி செடி இந்து மதத்தில் துளசி செடிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த செடியை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. இதன் காரணமாக தான் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடியை வைத்து அதை வணங்குகிறார்கள். துளசி செடி மத நம்பிக்கை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது.

இத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி துளசி வேரை வீட்டின் பிரதான வாசலில் கட்டினால் செல்வம் பெருகும். செல்வத்தின் தெய்வம் ஆனால் லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் அந்த வீட்டின் மீது எப்போதும் நிலைத்திருக்கும். இது தவிர பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.
இதையும் படிங்க: வீட்டில் காய்ந்த துளசி செடியை தூக்கி எறிவதற்கு முன் இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிகோங்க...

வாஸ்து படி, உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் துளசி வேரை கட்டுவதற்கு என சில விதிகள் சொல்லப்பட்டுள்ளன. அதாவது துளசி செடி காய்ந்த பிறகு அதன் வேர்களை அகற்றி விடுங்கள். இப்போது ஒரு சிவப்பு துணியில் துளசி வேர் மற்றும் ஒரு கைப்பிடி அரிசி போட்டு அதை முடிச்சு போட்டு, உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் நூலின் உதவியுடன் கட்ட வேண்டும்.
இதையும் படிங்க: துளசி செடிக்கு இவ்வளவு பவரா? அள்ள அள்ள குறையாத பணம்..

வாஸ்துபடி துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது இது வீட்டில் இருந்தால் வீட்டில் எதிர்மறை சக்தி நீங்கிவிடும். இதற்கு நீங்கள் துளசி செடியை வடக்கு அல்லது கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். துளசி இலைகளை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒருபோதும் பறிக்கவே கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை தேவைப்பட்டால் லட்சுமி தேவியிடம் கைதட்டி பிரார்த்தனை செய்த பிறகு தான் அவற்றை பறிக்க வேண்டும்.