ARTICLE AD BOX
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர்உசேன் பிஜிலி பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டுள்ள கும்பல் ஒன்று தம்மை கொலை செய்யக் கூடும் என்றும். திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் இருவரும் தாம் கொலை செய்யப்படுவதை ஊக்குவிப்பதாகவும், மேற்கண்ட காவல்துறை அலுவலர்கள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே சிறப்புப் புலனாய்வுப் படை அமைத்து, இக்கொலையிலும், இதற்குப் பின்னணியில் வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் சதிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
The post ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலையில் உரிய விசாரணை: வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.