பாசிப்பிடித்த தண்ணீர் தொட்டி! சுத்தம் செய்வது எப்படி?

2 hours ago
ARTICLE AD BOX

வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது நோயின்றி வாழ வழி வகுக்கும். வீட்டின் அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் வாட்டர் டேங்கை பயன்படுத்துவதால் அதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுத்தம் செய்யும் நாளில் மோட்டார் போட்டு டேங்கை முழுவதுமாக நிரப்புவதை தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்வதற்கு முன்பு டாங்கில் உள்ள தண்ணீரை முதலில் முழுமையாக வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியேற்றப்படும் தண்ணீரை வீணாகாமல் வீட்டின் தேவைகளுக்காக பக்கெட்டில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதையும் காலி செய்து சுத்தம் செய்வது தான் சிறந்தது. இதன் மூலம் தொட்டியின் அடியில் தேங்கி நிற்கும் குப்பைகள், அசுத்தங்கள், மண் துகள்கள், அழுக்குகள், பாசிகள், கறைகள் முழுவதும் நீங்கும். இதற்கு தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள வால்வைத் திறந்து தண்ணீரை வெளியேற்றவும்.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் விலையில் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த 5 மின்விசிறிகள்!
Water Tank

தொட்டியை காலி செய்யும் சமயம் அருகில் ஏதேனும் மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை அணைத்து வைக்கவும். கையில் ரப்பர் கையுறைகளை அணிந்து கொண்டு பாசிகளையும், அழுக்குகளையும், குப்பைகளையும் நீக்கலாம். தொட்டியில் எப்பொழுதும் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் அங்கு வழுக்கும். எனவே ஜாக்கிரதையாக சுத்தம் செய்ய வேண்டும்.

தண்ணீர் தொட்டிக்கு அருகில் ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். இது டேங்கை சுத்தம் செய்ய பயன்படும். டேங்கில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்ததும் டேங்க்கின் தரையையும், பக்க சுவர்களையும் நன்கு அழுத்தி தேய்த்து சுத்தம் செய்யவும். இதற்கு கட்டை தொடப்பம் அல்லது பிரஷை உபயோகிக்கவும். இதன் மூலம் பூஞ்சைகள், பாசிகள் மற்றும் கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
ஃப்ரண்ட்-லோட் Vs டாப்-லோட் வாஷிங் மெஷின்: எது சிறந்தது?
Water Tank

பிறகு தண்ணீரை டேங்கில் வேகமாக அடித்து ஊற்றி கழுவவும். ப்ளீச்சிங் பவுடர் எல்லா பக்கங்களிலும் போட்டு நன்கு தேய்த்து சூரிய ஒளியில் 2 மணி நேரம் காய விடவும். சுத்தம் செய்வதற்கென்றே கிருமி நாசினி ஸ்பிரேக்கள், லிக்விட் சோப்புகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். இதன் மூலம் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தும் போய் விடும்.

ப்ளீச்சிங் பவுடர் அல்லது கிருமிநாசினியை பயன்படுத்தியதும் டேங்கில் சிறிதளவு தண்ணீர் விட்டு வீட்டின் தேவைக்கு செல்லும் பைப்லைன் குழாய்களைத் திறந்து அதன் வழியாக இந்த தண்ணீரை வெளியேற்றவும். இதனால் அழுக்கடைந்து இருக்கும் பைப் லைன்களும் சுத்தமாகும். கிருமி நாசினி பயன்படுத்திய பின்பு வெளியேற்றும் நீரை வீட்டின் தேவைகளுக்கோ, செடிகளுக்கோ பயன்படுத்த வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
மின்சாரக் கட்டணத்தை பாதியாகக் குறைக்கும் 3 எளிய வழிகள்!
Water Tank

தொட்டியை சுத்தம் செய்த பின் நல்ல உலர்ந்த துணி கொண்டு தரைப்பகுதியை துடைத்து சூரிய ஒளியில் சில மணி நேரம் டேங்க்கை திறந்து வைத்து உலர விடவும். பின்பு மோட்டார் போட்டு தண்ணீரை நிரப்பலாம்.

பெரிய அளவு தண்ணீர் தொட்டி எனில் உதவிக்கு கூட ஒருவரை வைத்துக்கொண்டு சுத்தம் செய்வது நல்லது. பொதுவாக குளோரின் தண்ணீர் கிருமி நீக்கம் செய்யும் என்பதால் அவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரில் சேர்த்து விடுவது பாக்டீரியாக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களை அழிக்க உதவும்.

Read Entire Article