பாக்கியா கேட்ட கேள்வி, பேச முடியாமல் நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

16 hours ago
ARTICLE AD BOX
baakiyalakshimi serial today episode update 05-02-25

பாக்கியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றுள்ளார் கோபி.

baakiyalakshimi serial today episode update 05-02-25baakiyalakshimi serial today episode update 05-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவிடம் கோபி பசங்க வந்ததும் உனக்கு ரொம்ப சந்தோஷம் தானே தெரியுது முகத்திலேயே கொஞ்சம் என்று சொல்ல செல்வி, அக்கா கடுப்புல இருக்கு எப்படி தான் இவ்வளவு நாள் அக்கா கூட வாழ்ந்தார் தெரியல என்று சொல்லுகிறார். உடனே டென்ஷன் ஆனா பாக்கியா நான் உங்ககிட்ட வந்து என் பசங்க பிரிஞ்சு இருக்கிறதுனால எனக்கு வருத்தமா இருக்குன்னு சொன்ன,நீங்களா ஒரு முடிவு எடுத்துட்டு நீங்களா ஒரு வேலையை பண்ணி இப்படி பண்ணி வைத்துவிட்டு வந்து சந்தோஷமான கேக்குறீங்க.

செழியன் மாமனாருக்கு உடம்பு சரியில்லன்னு வேலை பார்த்துகிட்டு உதவியா இருந்தான் எழில் வேற ஒரு காரணத்துக்காக வீட்டுக்கு வர முடியாம இருந்தா நாங்க அப்பயும் போன் பேசிக்கிட்டு சந்திச்சிக்கிட்டு சந்தோஷமா தான் இருந்தோம் ஆனால் இப்போ எல்லாரும் வீட்டுக்கு வந்துட்ட உடனே எல்லாருக்கும் தேவைப்படுறதுக்கு படாதது என எல்லாம் நான் செஞ்சு கொடுக்கணும். நான் காலையில கிச்சன் கொள்ள போனேன் இன்னும் முடியல ஈவினிங் ஆயிடுச்சு ரெஸ்டாரன்ட் போகல வீட்டு வேலை பார்த்துப்பேன் சரி ரெஸ்டாரன்ட் யார் பார்த்துப்பாங்க அது மட்டும் இல்லாம வீடு ரெஸ்டாரன்ட் பிரச்சனையை கூட விடுங்க. என் பசங்களுக்கு சமைச்சு கொடுத்த இடத்துல எனக்கு சந்தோஷம்தான். இப்போ ஜெனி அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல அடிக்கடிக்கு போவா செழியன் போய் பாத்துட்டு வருவான் அது அவங்க போகக்கூடாதுன்னு சொல்லுவாங்க.

அமிர்தா கிட்ட ஜெனி ரெண்டு குழந்தை பெத்துட்டா நீ இன்னும் குழந்தை பெத்துக்களையா என்று கேட்பார்கள்.எழில் கிட்ட அது தான் படம் பண்ணி முடிச்சிட்ட சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் அது எழிலுக்கு கஷ்டம் இது மாதிரி பிரச்சனையா வந்துகிட்டே இருக்கும் கோவிச்சுக்கிட்டு எல்லாரும் ரூம்ல போய் உட்காருவாங்க அவங்கள எல்லாம் போய் யார் சமாதானம் பண்றது என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கோபி ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு நிற்கிறார். பிறகு கிச்சனுக்கு சென்று பாக்யா எதுவும் தெரியாமல் வந்து பேசிகிட்டு இருக்காங்க என்று டென்ஷனாக கோபி ஈஸ்வரி ரூமுக்கு வருகிறார்.

ஈஸ்வரி போனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்க யார்கிட்டமா பேசிக்கிட்டு இருந்தீங்க என்று கேட்கிறார் உங்க அப்பாவோட சொந்தக்காரர் பொண்ணு கலை செழியன்,எழில் வீட்டை விட்டு போகும் போது அப்படியே எல்லாம் இருக்கக்கூடாது இப்படி போயிட்டாங்களே என்று பின்னாடி பேசினார் அதனாலதான் திரும்ப வந்துட்டாங்கன்னு அவகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார். பிறகு உன் முகம் என்ன ஒரு மாதிரி இருக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க இல்ல நீங்க கோவிலுக்கு போகலாம் என்று சொன்னீர்களா நாளைக்கு போகலாம் என்று சொல்ல அதெல்லாம் இருக்கட்டும் உன் முகம் சரி இல்லையே என்று மீண்டும் கேட்க இல்ல பாக்யாவுக்கு பசங்க வந்ததில்ல ஏதோ ஒரு மாற்றம் தெரியும் பார்த்தா தெரியல என்று சொல்ல தெரியுதா தெரியுதா அதுதான் நானும் பார்த்தேன் அவங்க வந்த போது நம்மளுக்கு என்ன சந்தோஷம் அவளுக்கு இல்ல, பாக்யா முன்ன மாதிரி இல்ல இப்ப ரொம்ப மாறிட்டா பணம் சம்பாதிக்கிறதுனால மதிக்கிறது இல்லை. முன்னாடி எல்லாம் நான் சாப்பிடலனா என்னனு கேப்பா கெஞ்சி சாப்பிட சொல்லுவா ஆனா இப்ப அப்படி எல்லாம் கிடையாது அதுவும் பசங்க வந்து அவளுக்கு சந்தோஷமா இல்ல பணம் சம்பாதிச்சா எல்லாம் மாறிடுவாங்கன்னு உங்க அப்பா சொன்னாரு ஆனா அத பாக்யா விஷயத்திலே பார்க்கும்போது கஷ்டமா இருக்கு. இதுல வேற மூணாவது ரெஸ்டாரன்ட் ஓபன் பண்றேன்னு சொல்றா. ரெண்டு பையனும் நல்லா சம்பாதிக்கிறாங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கறதை விட்டுட்டு இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கா அதுக்கப்புறம் நைட் கூட வீட்டுக்கு வரமாட்டா போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவ எப்படி எல்லாம் போகட்டும் ஆனா பசங்களா வீட்டுக்கு வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என ஈஸ்வரி சொல்லுகிறார்.

பாக்கிய அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க ஒருவராக வந்து உட்காருகின்றனர் பிறகு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி விட ஒன்றாக உட்கார்த்து சாப்பிடுகின்றனர். ஜெனி எப்பவுமே அம்மாவோட கை பக்குவத்தை தான் மிஸ் பண்ணுவாங்க ஆனா நான் உங்களோட கை பக்குவத்தை தான் ஆண்ட்டி மிஸ் பண்ணேன் ரொம்ப டேஸ்டா இருக்கு என்று சொல்ல பாக்கியா சரி சாப்பிடுங்க என்று சொல்லுகிறார். செழியன் அப்பா வரலையா என்று கேட்க இவ தான் உங்க அப்பாக்கு சாப்பாடு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாலே அவன் கிச்சன்ல இருந்து வர வச்சு சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டான் என்று சொல்லுகிறார். உடனே ஜெனி இடம் குழந்தைகள் என்ன பண்ணுது என்று கேட்க இரண்டு பேருமே தூங்கிட்டாங்க என்று சொல்லுகிறார் அப்போ நிலா எங்கே என்று கேட்க அவங்க தூங்குறாங்க அதனால பக்கத்துல உக்காந்து பாத்துட்டு இருக்கா என்று சொல்லுகிறார். குழந்தைங்க ஒத்தையில இருந்தாலே விளையாட ஆள் இருக்காது என்று ஈஸ்வரி ஆரம்பிக்கிறார்.

உடனே அமிர்தா மற்றும் எழிலிடம் எப்போ குழந்தை பெத்துக்க போறீங்க படம் எடுத்துட்டு பெத்துக்கறேன்னு தான சொன்னீங்க என்று கேட்கிறார். அப்புறம் பாத்துக்கலாம் பாட்டி என்று சொல்ல எப்ப பார்க்கிறது என்ன அமிர்தா நீயும் அமைதியாக இருக்க என்று சொல்ல உடனே பாக்யா முறைத்துக் கொண்டே கோபியிடம் கண்ணை காட்டுகிறார் இதனால் கோப்பி இப்ப எதுக்குமா இத பத்தி பேசுறீங்க இப்பதான் வந்திருக்காங்க நம்ம பொறுமையா பேசிக்கலாம் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். இதனால் அமிர்தா மற்றும் எழில் முகம் மாறுகிறது.

பிறகு கோபி ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க எழில் போன் பேசிக் கொண்டே வருகிறார். கோபி என்ன கேட்கிறார்?அதற்கு எழில் பதில் என்ன? எழில் சொன்னதை கோபி நிறைவேற்றுவாரா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 05-02-25baakiyalakshimi serial today episode update 05-02-25

The post பாக்கியா கேட்ட கேள்வி, பேச முடியாமல் நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article