ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி மோதலில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் 3-2 என முன்னிலை வகிக்கிறது. 2004-ல் கங்குலி தலைமையிலும், 2009-ல் தோனி தலைமையிலும், 2017-ல் கோலி தலைமையிலும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதிவருகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
இந்தநிலையில் பாகிஸ்தான் 270 ரன்களுக்கு மேல் அடிக்கும் பட்சத்தில் இந்த போட்டியில் வெற்றிபெறும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது நடந்தால் பாகிஸ்தான் வெற்றிபெறும்..
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மைக்கேல் வாகன், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை விட விளையாட்டில் பெரிய மோதல் இல்லை. இதில் இந்தியாவே வெற்றிபெறும் விருப்ப அணியாக இருக்கிறது. ஆனால் இந்த மெதுவான ஆடுகளத்தில் 270 ரன்களுக்கு மேல் அடித்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும்” என பதிவிட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்துவரும் பாகிஸ்தான் அணி 16.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்களுடன் விளையாடிவருகிறது. கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் ஷாத் ஷக்கீல் இருவரும் பேட்டிங் செய்துவருகின்றனர்.