ARTICLE AD BOX
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க கிட்டத்தட்ட 45 கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், “ தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிப்பு குறித்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.

தமிழகத்தில் பல போராட்டங்களை தனித்துதான் செய்திருக்கிறோம். இதே கருத்தை 2003 ஆம் ஆண்டே நான் பேசியிருந்தேன். இந்தக் கட்சிகள், ஆட்சிகளின் கருத்தை நான் என்றுமே நம்புவது இல்லை. நீண்டகாலமாக நம்பி, நம்பி ஏமாந்த கூட்டம் நாங்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தித் தனித்துப் போராடுவோம். அதனால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs