உட்கார்ந்திருக்கும் போது காலாட்டும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? போச்சு!

4 hours ago
ARTICLE AD BOX

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நாம் கால்களை ஆட்டுவதைப் பார்த்தால், ‘கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது’ என்று கூறுவார்கள். இதற்கு பின் இருக்கும் உண்மையான காரணம் என்ன? காலாட்டுவதால் ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைப் பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.

சாதாரணமாக அமர்ந்திருக்கும் போது தன்னையே அறியாமல் சிலருக்கு காலாட்டும் பழக்கம் இருக்கும். சிலருக்கு ஒரு கால் மட்டும் ஆட்டும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலரோ இரண்டு கால்களையும் சேர்த்து ஆட்டுவார்கள்.

சில சமயங்களில் இந்த பழக்கம் உடல் ரீதியான பிரச்னையின் அடையாளமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். Restless Leg Syndrome (RLS) என்ற நரம்பு சம்மந்தமான பிரச்னை இருப்பவர்களுக்கு கால்களை ஆட்ட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுமாம். ஸ்ட்ரெஸ், பதற்றம், பயம் போன்ற காரணத்தால் சிலர் அதிகமாக கால்களை ஆட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உணவு அருந்துவதற்கு முன் வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதன் காரணம் தெரியுமா?
Restless leg syndrome

சில சமயங்களில் கால்களை ஆட்டுவது ஈடுபாடு இல்லாமல் சலிப்பாக இருப்பதைக் காட்டுகிறது. மனம் அலைப்பாயும் சமயத்திலும், எந்த ஒரு விஷயத்திலும் ஈடுப்பாடு இல்லாத நேரத்திலும் கால்களை ஆட்டுவதின் மூலமாக அதை ஒரு கவனச்சிதறலாக நம்முடைய மூளை பயன்படுத்திக் கொள்கிறது. சிலருக்கு ஸ்ட்ரெஸ், பதற்றம் ஆகியவற்றை போக்குவதற்கு கால் ஆட்டுவது உதவுகிறது. இதுப்போன்ற ஸ்ட்ரெஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை செய்வது பலன் அளிக்கும்.

கால்களை ஆட்டுவது நம்முடைய பொறுமையற்றத் தன்மையைக் காட்டுகிறது. சிலருக்கு எந்த செயல் செய்தாலும் அதில் உடனுக்குடன் முடிவு தெரியவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதுப்போன்ற நபர்களுக்கு காலாட்டும் பழக்கம் இருக்கும். இது அவர்களின் பொறுமையற்றத் தன்மையைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முதியோர் இல்லங்கள் அதிகரிக்க முதியவர்கள்தான் காரணமா? உண்மை என்ன?
Restless leg syndrome

ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளை செய்பவருக்கு இந்த பழக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது அவர்களின் ஆற்றல்மிக்க ஆளுமைத்தன்மையை காட்டுகிறது. மேலும் அவர்களின் துடிப்பான மனநிலையை வெளிக்காட்டுகிறது.

ஆன்மீக ரீதியாக கால்களை ஆட்டுவது வீட்டிற்கு மகாலக்ஷ்மியை வரவிடாது, சந்தோஷம், வெற்றி, செல்வம் ஆகியவற்றை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

Read Entire Article