ARTICLE AD BOX

Image Courtesy: @ICC
வெல்லிங்டன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரின் 4வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரில் இருந்து நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக அவர் எஞ்சிய தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சாக் போல்க்ஸ் மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கும் நியூசிலாந்து அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.