சக்கர நாற்காலியில் இருந்தாலும் சிஎஸ்கே என்னை விடாது.. என் ஓய்வு அப்பொழுதுதான் – தோனி பேச்சு

1 day ago
ARTICLE AD BOX

சிஎஸ்கே அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்னும் எவ்வளவு காலம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தான் விளையாடுவேன் என்பது குறித்து மிகவும் நகைச்சுவையான முறையில் பதில் அளித்து இருக்கிறார்

தற்போது மகேந்திர சிங் தோனிக்கு 43 வயதாகிறது. அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்கின்ற சந்தேகம் அனைத்து அணிகளின் ரசிகர்களுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் இன் போதும் அவருடைய கடைசி சீசன் இதுதான் என பேச்சுகள் எழுகிறது. ஆனால் அவர் அடுத்தடுத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

தோனி சொல்லாத விஷயம்

தோனி இதனால் வரையில் தன்னுடைய கடைசி சீசன் இதுவென எந்த சீசனையும் சொன்னது கிடையாது. மீடியாக்கள் அப்படியான பரப்புரையை தொடர்ந்து செய்து வந்தன. இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் ஓய்வு பெறுகின்ற கடைசி சீசனாக இருந்து விட்டால் என்ன செய்வது என ரசிகர்கள் கூட்டமாக சென்று பார்க்க ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பரபரப்பு இருக்கிறது.

இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெற்று விடுவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அன் கேப்ட் வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாட வந்திருக்கிறார். இன்று எல் கிளாசிகோ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.

சக்கர நாற்காலியில் இருந்தாலும் விட மாட்டார்கள்

இது குறித்து பேசி இருக்கும் மகேந்திர சிங் தோனி கூறும் பொழுது ” நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும் என்னை சிஎஸ்கே விடாது. இப்படிப்பட்ட ஒரு அணிக்காக நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். இது என்னுடைய அணி. இதற்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம்” என்று நகைச்சுவையாக பதில் அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. எம்எஸ் தோனியை இம்பாக்ட் பிளேயரா யூஸ் பண்ண போறீங்களா.? சிஎஸ்கே கேப்டனின் சுவாரசிய பதில்

சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவராக சுரேஷ் ரெய்னா 4687 ரன்கள் எடுத்திருக்கிறார். இதை முறியடிக்க தோனிக்கு 19 ரன்கள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவராக பிராவோ 140 விக்கெட் எடுத்திருக்கிறார். இதை முறியடிக்க ரவீந்திர ஜடேஜாவுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சக்கர நாற்காலியில் இருந்தாலும் சிஎஸ்கே என்னை விடாது.. என் ஓய்வு அப்பொழுதுதான் – தோனி பேச்சு appeared first on SwagsportsTamil.

Read Entire Article