பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

3 hours ago
ARTICLE AD BOX

பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்களினால் ஹோலி பண்டிகை கடூம் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை பராமரிக்கும் எவாக்யூ டிரஸ்ட் பிராப்பர்டி போர்ட் (இடிபிபி) எனும் அமைப்பின் சார்பில் நேற்று (மார்ச் 13) மாலை ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஹோலி கொண்டாட்டங்களுக்காக லாஹூரிலுள்ள கிருஷ்ணர் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், பாரம்பரிய உணவுகளும் இனிப்புகளும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

இத்துடன், அங்குள்ள பெண்கள் இணைந்து ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடி நடன நிகழ்ச்சி நடத்தியதுடன், தங்களது பண்டிகையை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மேலும், அந்நாட்டில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் பயங்கர பாதுகாப்புடன் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எவாக்யூ டிரஸ்ட் பிராப்பர்டி போர்ட் (இடிபிபி) அமைப்பின் துணை செயலாளரான சைஃபுல்லா கோக்கர், ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானிலுள்ள மற்ற இந்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article