ARTICLE AD BOX
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சாம்பியன்ஸ் கோப்பையில் தூள் கிளப்பிய இந்திய பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 3 நிலைகள் முன்னேறி 3வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 3 நிலைகள் முன்னேறி 10வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 16 நிலைகள் உயர்ந்து 80வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
முதல் 2 இடங்களில் மகீஷ் தீக்ஷனா (இலங்கை), மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து) உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜடேஜா, அக்சர், ஹர்திக், குல்தீப் ஆகியோர் முறையே 10, 13, 23, 30 ஆகிய இடங்களில் உள்ளனர். அதேபோல் அணிகளுக்கான ஒருநாள் ஐசிசி தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு 2வது இடம்.
The post பவுலிங்கில் சாதித்த இந்தியர்கள் முதலிடத்தை நோக்கி முன்னேறும் குல்தீப் appeared first on Dinakaran.