பவர் லிஃப்டிங்.. கழுத்தை உடைத்த 270 கிலோ கம்பி.. தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை உயிரிழப்பு

4 days ago
ARTICLE AD BOX

பவர் லிஃப்டிங்.. கழுத்தை உடைத்த 270 கிலோ கம்பி.. தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை உயிரிழப்பு

India
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 18 தேதி அன்று பவர் லிஃப்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பியை தூக்கிய போது, தவறி விழுந்து கழுத்து உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் ஜூனியர் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பவர் லிஃப்டிங் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா (17 வயமு) ஜிம்மில் செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 18 அன்று) பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது பயிற்சியாளர் உதவியுடன் 270 கிலோ எடையை தூக்கி பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யஷ்டிகா ஆச்சார்யா தலைக்கு மேல் 270 கிலோ எடையை தூக்க முயன்ற போது, கை தவறியது.

அப்போது பயிற்சியாளரும் வாங்க முயற்சித்தார். ஆனால் அவரால் வாங்க முடியவில்லை.. இதனால் யஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்தன் பின்பக்கம் அப்படியே மொத்த எடையும் விழுந்தது.இதில வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்து நர்ம்பு உடைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் யஷ்டிகா ஆச்சார்யா மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அஙகு பிரேத பரிசோதனைக்கு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பவர் லிஃப்டிங் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார். அவருக்கு நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

பவர் லிஃப்டிங் என்பது ஒரு வலிமையான விளையாட்டு ஆகும். இதில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் என்ற மூன்று லிஃப்ட்களில் அதிகபட்ச எடையை தூக்கும் விளையாட்டு ஆகும் . இந்த விளையாட்டு ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக இல்லை..

270kg Rod Falls On Powerlifter s Neck During Training A gold medallist power-lifter died

விளையாட்டுகளில் ஏற்படும் விபத்துகள், அரிதானவை ஆகும். எனினும் கடந்த காலங்களில் விபத்துக்கள் நடந்துள்ளன. கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹியூஸ், 2014 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின் போது பவுன்சர் பந்து தாக்கியதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

More From
Prev
Next
English summary
Yashtika Acharya, a 17-year-old athlete from Rajasthan, was a gold medalist in powerlifting at the National Youth Games. She was engaged in powerlifting training on February 18 when Yashtika Acharya fell and broke her neck while lifting a 270 kg bar.
Read Entire Article