ARTICLE AD BOX
பழைய சாதத்தில் அப்படி என்ன நன்மை இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அமெரிக்கன் நியூட்ரிசன் அசோசியேஷன் பழைய சாதத்தில் பெருமைகளையும் வளங்களையும் பட்டியலிடுகிறது என்றால் நம்ப முடிகிறதா..
பழைய சாதத்தில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன. காலை வேளையில் இதை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும் உடல் உஷ்ணத்தை போக்கும் நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைக்கும். பழைய சாதம் நார்ச்சத்து தன்மையை கொண்டிருப்பதால் மலச்சிக்கலை நீக்கும் புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் உடல் சோர்வை விரட்டும். ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பழைய சாதம் தீர்வு தரும் இளமை தோற்றத்தை தக்க வைக்கும் உதவும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்த பழைய சாதம் வெளிநாட்டில் இருப்பவருக்கு வேண்டுமென்றால் அதிசயமாக இருக்கலாம் ஆனால் நமக்கு பாரம்பரிய உணவாகும் எனவே அடிக்கடி பழைய சாதம் சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்வோம்..!!