விக்கெட் வேட்டையாடிய ஹர்ஷித்.. முதல் போட்டியிலேயே புதிய சாதனை..!

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
06 Feb 2025, 1:06 pm

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில் இன்று ஒருநாள் தொடர் தொடங்கியது.

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியாவில் ஜெய்ஸ்வாலும், ஹர்ஷித் ராணாவும் தனது முதல் ஒருநாள் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். விராட் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு நேற்றிரவு முழங்கால் பிரச்னை ஏற்பட்டதாக டாஸின் போது ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். ஷமி வெகு நாள் கழித்து சர்வதேச ஒருநாள் போட்டியில் மீண்டும் பந்து வீசினார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கட்டும் பிலிப் சால்ட்டும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கி பின் கியரை மாற்றினர். 8 ஓவர்களிலேயே அந்த அணி விக்கெட் இழப்பின்றி 71 ரன்களைக் குவித்திருந்தது. 9 ஆவது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் தேடுதலுக்கு பலன் கிடைத்தது. பிலிப் சால்ட் 43 ரன்களில் வெளியேற பின் இங்கிலாந்து அணி திணற ஆரம்பித்தது. ஏனெனில் 10 ஆவது ஓவரிலேயே இங்கிலாந்து அணியின் இரு விக்கெட்களை வெளியேற்றினார் அறிமுக ஆட்டக்காரரான ஹர்ஷித் ராணா. பென் டக்கெட்டும், ஹாரி ப்ரூக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.

ஜடேஜா, ஹர்ஷத் ராணா, ரோகித்
”போலீஸைவிட திருடர்கள் பெஸ்ட்” - வைரலாகும் ஹரியானா பெண்ணின் பதிவு!

பின் ரன்கள் மிக மெதுவாகவே சேர்ந்தது. 8 ஓவர்களில் 71 ரன்களை எடுத்திருந்த நிலையில் அடுத்த 10 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே இங்கிலாந்து சேர்த்திருந்தது. நிதானமாக ஆடிய ஜோ ரூட்டை ஜடேஜா வெளியேற்றினார். விக்கெட்கள் விழுந்தாலும் நிதானமாக ஆடிய பட்லெர் தனது 27 ஆவது ஒருநாள் அரைசதத்தினைப் பதிவு செய்தார்.

லிவிங்ஸ்டனை வெளியேற்றியதன் மூலம் ஹர்ஷித் ராணா புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்திய பந்துவீச்சாளர்களில் ஹர்ஷித் ராணாதான் மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் அறிமுகப் போட்டியிலேயே மூன்று விக்கெட்களை சாய்த்தவர்.

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களையும், ஜேக்கப் 51 ரன்களையும் எடுத்திருந்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி ஜடேஜா முதலிடம் பிடித்தார். இதுவரை ஜடேஜா 42 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா, ஹர்ஷத் ராணா, ரோகித்
வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் அடுத்தடுத்து மரணம்; காரணம் என்ன?

போட்டி முடிந்து பேசிய ஹர்ஷித் ராணா, “இது என்னுடைய கனவு. நான் இதற்கு தயார்ப்படுத்திக் கொள்ள கடினமான களங்களில் பயிற்சி செய்தேன். இந்த போட்டியில் நான் முதலில் சரியான லென்த்களில் பந்தினை வீசவில்லை. அதைச் சரிசெய்த உடன் விக்கெட்களைப் பெற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

249 ரன்கள் எனும் இலக்கைக் கொண்டு இந்திய அணி களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். ஜெய்ஸ்வால் 15 ரன்களில் தனது விக்கெட்டை ஆர்ச்சரிடம் பறிகொடுக்க ரோகித்தும் 2 ரன்கள்க்கு பெவிலியன் திரும்பினார். பின் இணைந்த ஸ்ரேயாஸ் மற்றும் கில் இணை அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து வருகிறது.

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 71 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. ஸ்ரேயாஸ் 16 பந்துகளில் 35 ரன்களையும், கில் 15 பந்துகளில் 11 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

ஜடேஜா, ஹர்ஷத் ராணா, ரோகித்
புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க புது சட்டம்.. மத்திய அரசு திட்டம்!
Read Entire Article