பழமை மாறால் புதுப்பிக்கப்படும் காதல் சின்னம் - தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா..?

4 days ago
ARTICLE AD BOX

தஞ்சாவூர்: பழமை மாறாமல் புதுப்பிக்கிறாங்க... தஞ்சை அருகே  ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள்சத்திரம் (Muthammal Chathiram) தஞ்சை மாவட்டத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 6-வது நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சத்திரம் ரூ.13 கோடி செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதை இப்பகுதி மக்கள் காதல் சின்னம் என்றுதான் சொல்கின்றனர்.

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் பல்வேறு சத்திரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த வகையில் பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சை முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இவற்றில் தஞ்சையில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குள சத்திரம், மணமேல்குடி திரவுபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேசுவரத்தில் ராமேசுவரம் சத் திரம். தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் என நெடுகிலும் 20 சத்திரங்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் தனது காதல்மனைவி முத்தம்மாள் பிரசவத்தின் போது உயிரிழந்தார். அதற்கு முன்பு அவர் தன் நினைவாக அங்கு கர்ப்பிணிகளுக்கு மருத்துவம், கல்வி, உணவு வழங்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டதையடுத்து அந்த பகுதியை முத்தம்மாள் என பெயரிட்டு மனைவி நினைவாக சத்திரத்தை 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது.

காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரை செல்லும் வழியில் ராமேசுவரம் செல்லும் யாத்ரீகர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந்தச்சத்திரம் இருந்துள்ளது. அழகிய தோரண அமைப்புடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும், தூண்கள் தாங்கி நிற்கும் பெரியமுற்றங்களும், ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், நீர் நிறைந்த கிணறும் பழமைமாறாமல் உள்ளன.

ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் பள்ளிக்கூடமானது

ஒருகாலத்தில் சத்திரமாகவும் பின்னர் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் பள்ளிக்கூடமாகவும் அதைத் தொடர்ந்து விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது அதன்பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் செடி, கொடிகள் முளைத்து காணப்பட்டது. நாளுக்கு நாள் சிதிலமடைந்து வரும் இந்த முத்தம்மாள் சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நினைவுச்சின்னமாக அறிவித்து பராமரிப்பு

இந்த சத்திரத்தை தமிழக தொல்லியல்துறை நினைவுச்சின்னமாகவும் அறிவித்து பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அரண்மனை, மனோரா, பாபநாசத்தில் உள்ளநெற்களஞ்சியம் உள்ளிட்ட 5 நினைவுச்சின்னங்கள் தமிழக தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6-வது நினைவுச்சின்னமாக தமிழக தொல்லியல் துறை முத்தம்மாள்சத்திரத்தை அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த முத்தம்மாள்சத்திரம் ரூ.13 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. முதல்கட்டமாக கட்டிடத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தமிழக தொல்லியல் துறையினர் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள்சத்திரம் தமிழக தொல்லியல்துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தின் 6-வது நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.13 கோடி செலவில் தமிழக தொல்லியல் துறையின் பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் ஒரு பிரிவு சார்பில் பழமை மாறால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முத்தம்மாள் சத்திரம் நாளடைவில் பள்ளியாகவும், விடுதியாகவும் செயல்பட்டது. ஆனால் மன்னர் எவ்வாறு கட்டினரோ? அதே போன்று, புதிதாக தற்காலிகமாக கட்டிய கட்டிடங்களை அகற்றி விட்டு பழமை மாறாமல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக சிதிலமடைந்த பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்பின்னர் செடி, கொடிகள் அகற்றப்பட்ட இடத்திலும், மீண்டும் செடி, கொடிகள் முளைக்காதவாறு ரசாயன கலவை கொண்டு பூசப்பட்டு அதன் பின்னர் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 2 ஆண்டுகளில் இந்த பணிகளை முடித்து, பொதுமக்கள் பார்க்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Read Entire Article