ARTICLE AD BOX
தேனி: தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள போடி பிரிவில் ரவுண்டானாவின் மையத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனியில் இருந்து போடி, மூணாறு, கம்பம் ,குமுளி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பழனிசெட்டிபட்டியை கடந்து செல்கின்றன. இதில் போடி மற்றும் மூணாறு செல்லும் வாகனங்கள் பழனி செட்டி பட்டியை அடுத்துள்ள போடி பிரிவிலிருந்து பிரிந்து செல்கின்றன. கம்பம் மற்றும் குமுளி செல்லும் பேருந்துகள் போடி பிரிவில் திரும்பாமல் நேராக முத்துதேவன்பட்டி வழியாக சென்று வருகின்றன. இதில் பழனிசெட்டிபட்டியை அடுத்து போடி பிரிவில் வானங்கள் சென்று வரும்போது மூன்று சாலைகள் இணையும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டன. இதனை தடுக்கும் விதத்தில் மாவட்ட போலீஸ் துறை எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டு அகலமான ரவுண்டானா அமைக்கப்பட்டது.
கான்கிரீட்டினாலான ரவுண்டானா அமைக்கப்பட்ட போதும் ரவுண்டானாவிற்குள் மண் நிரப்பாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. மேலும் ரவுண்டானாவில் ஒளிரும் பட்டைகள் முழுமையாக இல்லாத நிலை உள்ளது இதனால் இச்சாலைகளில் விரைவாக வரக்கூடிய வாகனங்களுக்கு ரவுண்டானா இருப்பது இரவு நேரத்தில் சரிவர தெரிவதில்லை. இதனால் சில சமயங்களில் ரவுண்டானாவில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்துடன் இணைந்து ரவுண்டானாவின் நடுவில் உயர் மின் கோபுர விளக்கு (ஹைமாஸ்) அமைக்க வேண்டும் மேலும் ரவுண்டானாவை அழுகிற செய்யும் வகையில் தனியார் வணிக நிறுவனங்களிடம் ஒப்படைத்து அழகு படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post பழனிசெட்டிபட்டியில் உள்ள போடி பிரிவு ரவுண்டானாவில் ஹைமாஸ் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.