பள்ளி மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’.. சென்னை பட்ஜெட்டில் அள்ளி அள்ளிக் கொடுத்த மேயர் பிரியா!

3 hours ago
ARTICLE AD BOX

பள்ளி மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’.. சென்னை பட்ஜெட்டில் அள்ளி அள்ளிக் கொடுத்த மேயர் பிரியா!

Chennai
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, போட்டித் தேர்வு, ஊக்கத்தொகை, விளையாட்டு உபகரணங்கள் என சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு ஜாக்பாட் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் சென்னை மேயர் பிரியா ராஜன்.

சென்னை மாநகராட்சியில் 2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரும் நிதி ஆண்டிற்கு ரூ.5145.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Chennai Chennai Corporation Budget 2025 Mayor Priya 2025

பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்புகள்

1. சென்னை பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தி பரிசுகள் வழங்க, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகளும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்க ரூ.ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும். போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000 முதல் ரூபாய் 150,000-வரை வழங்கவும் ரூபாய் 40.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு. அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளிமாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

4. சென்னை நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் புவியியல் பாடத்தினை எளிதாக கற்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் தலா ஒரு புவி உருண்டை (Globe) விதம் 2,300 வகுப்பறைகளுக்கு ரூபாய் 39.10 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

5. பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள் 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000 என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்காக ரூபாய் 2.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Chennai Chennai Corporation Budget 2025 Mayor Priya 2025

6. 29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப் பந்து எறிபந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோகோ, கபடி நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக சென்னை பட்ஜெட்டில் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. 26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து எறிபந்து கால் பந்து, இறகுப் பந்து, கோ கோ.கபடி,நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. 50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் ககூடைப் பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி, பயிற்சிகள் மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9. 50 சென்னை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்றும் தலா ரூபாய் 60,000 என்ற அடிப்படையில் சமப்படுத்தி சீரமைக்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Chennai Chennai Corporation Budget 2025 Mayor Priya 2025

10. மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 62.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11. சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ மாணவியர்கள், தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கு பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 2500 மதிப்பிலான தரமான Sports Shoes வழங்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12. சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள் பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000 வீதம் வழங்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 1.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

13. சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காட்சி வழியாக பாடங்களை விளக்குவதால் அம்மாணவர்கள் அதனை எளிதில் புரிந்து கொண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிடும் வகையில் 81பள்ளிகளுக்கு தலா இரண்டு வீதம் 162 பெரிய அளவிலான மின்னணு பலகைகள் (Display) வழங்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14. சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 100 பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்பறைகளில் (LKG மற்றும் UKG) குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க ஏதுவாக அவ்வகுப்பறைகளின் சுவற்றில் வர்ணம் பூசுதல், விளக்கப்படங்கள், மரச்சாமான்கள் பொருத்துதல் வண்ணப்படங்கள் வரைதல், குழந்தைகள் அமர்வதற்காக பல வண்ணங்களில் வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

16. பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும். 52 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, மின்னாக்கி (Generator) அமைக்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் 4.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
English summary
Chennai Mayor Priya Rajan has announced various jackpot announcements in the Chennai Corporation budget for school students.
Read Entire Article