'பல்லாண்டுத் தாவரம்’ என்பது எதுவென்று தெரியுமா?

18 hours ago
ARTICLE AD BOX

தாவரங்களில் வாழ்க்கைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுத் தாவரம், இரு பருவத் தாவரம், பல்லாண்டுத் தாவரம் என்று மூன்று வகையாகத் தாவரங்கள் பிரிக்கப்படுகின்றன.

ஆண்டுத் தாவரம்

ஒற்றை வளர் பருவத்திலேயே முளைத்து, வளர்ந்து, பூத்து, விதை உண்டாக்கி, மடிந்து தன் வாழ்க்கைச் சுற்றை முடித்துக்கொள்ளும் தாவரத்தை ஆண்டுத் தாவரம் அல்லது ஓராண்டுத் தாவரம் (Annual Plant) என்கின்றனர். பொதுவாக, ஆண்டுத் தாவரங்கள் கோடை ஆண்டுத் தாவரம், குளிர்கால ஆண்டுத் தாவரமென இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

கோடை ஆண்டுத் தாவரம் என்பது வசந்தத்திலோ, கோடைத் தொடக்கத்திலோ முளைத்து, அவ்வாண்டின் இலையுதிர் காலத்துக்குள்ளாகவே முதிர்ச்சியடைந்து விடும். குளிர்கால ஆண்டுத் தாவரம் இலையுதிர்காலத்தில் முளைத்து, அடுத்த வசந்தத்திலோ கோடையிலோ முதிர்ச்சியடையும்.

இத்தாவரங்கள் ஆண்டுத் தாவரங்களென அழைக்கப் பட்டாலும், இத்தாவரங்களின் வளர் பருவமும், அது நடைபெறும் காலமும், இடத்தையும் தாவர இனத்தையும் பொருத்தே அமைகிறது. நூல்கோல் கிழங்கு (Oilseed Rapa) போன்ற சில ஆண்டுத் தாவரங்கள் ஒளிர் விளக்குகளின் கிழ் விதையிலிருந்து முளைத்து விதையாகத் திரும்புவதற்குச் சில வாரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. இத்தாவரங்கள் தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கின்றன. நெல், சோளம், பருத்தி, தர்ப்பூசணி போன்றவைகளை ஆண்டுத் தாவரங்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவில் குறைந்துபோன பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை!
Do you know what a 'perennial plant' is?

இரு பருவத் தாவரம்

தன் வாழ்க்கைச் சுற்றை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யும் ஒரு பூக்கும் தாவரத்தை இரு பருவத் தாவரம் (Biennial Plant) என்கின்றனர். தன் முதலாம் ஆண்டில் வேர்கள், தண்டுகள், இலைகள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் இத்தாவரம், குளிர் மாதங்களின் போது, உறங்கும் நிலையில் இருக்கும். அதன் பின்னர், தன் இரண்டாம் ஆண்டில் பூக்களையும், கனிகளையும், விதைகளையும் தோற்றுவித்துவிட்டு, இத்தாவரம் மடிந்து போகும். வெங்காயம், மஞ்சள் முள்ளங்கி போன்றவை இரு பருவத் தாவரங்களுக்கு உதாரணமாகும்.

பூக்கள், கனிகள் அல்லது விதைகளுக்காக நடப்படும் இரு பருவத் தாவரங்கள் இரண்டாண்டுகளுக்கு வளர்க்கப்படுகின்றன. இலைகளுக்காகவோ, வேர்களுக்காகவோ நடப்படும் இரு பருவத் தாவரங்கள் ஓராண்டுக்கு மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இவை பூப்பதற்கோ காய்ப்பதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

பல்லாண்டுத் தாவரம்

இரண்டாண்டுகளுக்கு மேலாக வாழும் தாவரங்களைப் பல்லாண்டுத் தாவரம் அல்லது பல பருவத் தாவரம் (Perennial Plant) எனப்படுவது ஒரு தாவரமாகும். இத்தாவரங்கள், ஒவ்வொரு பருவ இறுதியிலும், எஞ்சியப் பகுதியிலிருந்து புதிதாகத் தழைத்து வளர்ந்து பல ஆண்டுகள் தொடர்ந்து வாழக்கூடிய தன்மை கொண்டவை. மரங்களும், புதர்களும் மட்டுமல்லாது, பூச்செடிகளும், புல் பூண்டுகளும் பல்லாண்டுத் தாவர வகையில் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
இப்படிப்பட்ட குணங்களுடைய பெண்களிடம் பழகுவது மிகவும் சிரமமானது!
Do you know what a 'perennial plant' is?

பல்லாண்டுத் தாவரங்களில் இரண்டு வகைகள் உள்ளன. வசந்தத்திலும் கோடையிலும் வளர்ந்து மலர்ந்து, இலையுதிர், பனிக்காலங்களில் மாண்டு, பின்னர் அடுத்த வசந்தத்தில் வேர் போன்ற எஞ்சிய பகுதிகளிலிருந்து உயிர்ப்பித்துத் திரும்பும் பல்லாண்டுத் தாவரங்கள் மூலிகை பல்லாண்டு தாவரங்கள் (Herbaceous Perennials) ஆகும். உருளைக் கிழங்கு, புதினா, பன்னம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

வாழை மரமும் ஒரு பல்லாண்டு தாவரமாகும். வாழைத்தார் தள்ளிய மரத்திலிருந்து கன்றுகள் வளர்ந்து மரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. மரத்தாலான கடினமான தண்டைக் கொண்ட தாவரங்கள் இரண்டாம் வகை. இத்தாவரங்கள் குளிரையும் கோடையையும் தாங்கக்கூடிய தண்டுகளைப் பெற்றுள்ளன.

இவற்றின் தண்டுகளைப் பெரும்பாலும் மரப்பட்டைகள் மூடியிருக்கும். இவற்றில் சில, குளிர்காலத்தின் போது இலைகளை உதிர்த்து விடுகின்றன. வாழை, ஆப்பிள் மரம், தேவதாரு போன்ற தாவரங்கள் இவ்வகையைச் சேர்ந்தவைகளாகும்.

Read Entire Article