பருத்தி வீரன் படத்தில் படத்தில் நடிக்கவிருந்த 2 நடிகர்கள்!. வெளிவராத தகவல்!...

4 hours ago
ARTICLE AD BOX

Paruthiveeran: இயக்குனர் பாலாவும், அமீரும் சினிமாவில் சேர வேண்டும் என்கிற ஆசையில் ஒன்றாகவே சென்னை வந்தார்கள். தன்னுடைய உறவினர் மூலம் பாடலாசிரியர் அறிவுமதியை சந்தித்து பேசி பாலாவை பாலுமகேந்திராவிடம் சேர உதவி செய்தார் அமீர். அதன்பின் அமீர் மதுரை போய்விட பாலா பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

சேதுவுடன் பாலா: அதன்பின் பாலா சேதுபடத்தை துவங்கிய போது அதில் அமீர் உதவி இயக்குனராக வேலை செய்தார். சேது படம் மொத்தம் 9 பிரிண்ட்டுதான் போடப்பட்டது. நண்பனுக்காக அதில் ஒரு பிரிண்ட்டை மதுரைக்கு கொண்டு சேர்த்து தியேட்டரில் போட வைத்ததில் பெரும்பங்கு அமீருக்கு உண்டு.

சூர்யாவுக்கு நடிப்பு பயிற்சி: சேது படத்திற்கு பின் பாலா நந்தா படத்தை இயக்கியபோது அந்த படத்தில் இணை இயக்குனராக அமீர் வேலை செய்தார். அந்த படத்தில் சூர்யாவுக்கு நடிப்பை சொல்லி கொடுத்ததே அமீர்தான். ஆனால், படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் பாலாவுடன் சண்டைபோட்டுவிட்டு அந்த படத்திலிருந்து விலகினார்.


பருத்திவீரன் உருவான விதம்: அதன்பின் நந்தா பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் மௌனம் பேசியதே படத்தை எடுத்தார். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். சினிமாவில் சூர்யா வளர்ந்து வந்த நேரத்தில் மௌனம் பேசியதே அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் ராம் படத்தை இயக்கி முடித்துவிட்டு பருத்திவீரன் படத்தை இயக்கினார் அமீர்.

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படமாக பருத்திவீரன் இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பாக இப்படத்தை அமீர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தி அறிமுகம் என்றாலும் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

பருத்தி வீரன் நடிகர்கள்: இந்த படத்தை துவங்கியபோது சூர்யா நடித்த வேடத்தில் பாக்கியராஜின் மகன் சாந்தனும், சரவணன் நடித்த சித்தப்பு வேடத்தில் பசுபதியும் நடிப்பதாகவே இருந்தது. ஆனால், சூர்யா குடும்பத்துடன் அமீர் நெருக்கமாக இருந்ததால் சூர்யாவை வைத்து எடுக்க ஆசைப்பட்டார். அப்போது சினிமாவில் நடிக்க கார்த்தி ஆசைப்பட்டதால் 'அவனே நடிக்கட்டும்' என விட்டுக்கொடுத்தார் சூர்யா. அதன்பி சித்தப்பு வேடத்தில் சரவணன் நடித்தார். இப்போதுவரை பலரும் சரவணனை சித்தப்பு என்றுதான் அழைத்து வருகிறார்கள்.

Read Entire Article