ARTICLE AD BOX
அப்பா செல்லம்.. அப்படியே இர்பான் மாதிரியே இருக்காரே.. மகளுடன் செம போஸ் கொடுத்த யூடியூபர்!
சென்னை: உணவு யூடியூபரான இர்பான் தனது செல்ல மகளுடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். வயிற்றில் இருந்த குழந்தையின் பாலினத்தை வெளியே சொல்லிவிட்டார் இர்பான் என அவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டதும் அவரை சிக்கலில் சிக்க வைத்தது. ஆனால், அதற்காக பெரிதாக அவருக்கு எந்தவொரு தண்டனையும் கிடைக்கவில்லை. மருத்துவமனைக்குத் தான் 10 நாட்கள் செயல்படக் கூடாது என்கிற தண்டனை விதிக்கப்பட்டது.

நெப்போலியன் மகன் திருமணத்துக்காக ஜாலியாக ஜப்பான் போய்விட்டு ஏகப்பட்ட வீடியோக்களை எடுத்து வந்து வெளியிட்டு தனது யூடியூப் சப்ஸ்கிரைபர்களை இஷ்டத்துக்கு அதிகரித்துள்ளார் இர்பான்.
அப்பா பொண்ணு: இர்பான் வியூ எனும் யூடியூப் சேனலை நடத்தி பிரபலமானவர் தான் முகமது இர்பான். ஆலியா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இர்பான் தனது மனைவியையும் குடும்பத்தையும் தொடர்ந்து யூடியூப் வீடியோக்களிலும் ரீல்ஸ்களிலும் காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கினார். இந்நிலையில், தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டு, இவ அப்படியே அப்பா பொண்ணு என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

குட்டி இர்பான்: இர்பான் தனது மகளுக்கு தனது பெயரில் இருந்தே இஃபா எனும் பெயரை சூட்டியுள்ளார். அப்படியென்றால் ரிச்னஸ் என்றும் பதிவிட்டு இருந்தார். அப்படியே அச்சு அசல் குட்டி இர்பான் போலவே புசுபுசுவென குழந்தை இருப்பதாக பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். குழந்தை போட்டோவை எல்லாம் காட்ட வேண்டாம் என்றும் குழந்தைக்கு சுத்திப்போடுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
இஃபா வீடியோஸ் வரும்: இனிமேல் இர்பான் மனைவியை மட்டுமல்ல அடிக்கடி இர்பானின் மகள் இஃபாவையும் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் தனது செல்ல மகள் செய்யும் சேட்டைகளை எல்லாம் யூடியூபில் வீடியோக்களாக இர்பான் வெளியிடுவார் என்றும் கூறுகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இர்பான் அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வர வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். புதிதாக எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.