ARTICLE AD BOX
இந்த காலக்கட்டத்தில் அசை பிரியர்களுக்கு பிடித்தமான உணவாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் 65, சிக்கன் வறுவல், பிரட்டல், என பல வகைகளில் சிக்கன் சமைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கே.எஃப்.சி சிக்கன் சாப்பிடுவது பலரின் பேவரெட்டாக இருக்கும். அந்த வகையில், பார்ப்போமா?பரிதாபங்கள், வீடியோவில் கோபியும் சுதாகரும் சொன்ன, மகாராஜா சிக்கன் எப்படி செய்வது என்பதை
தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் – அரைகிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
ஃகார்ன் ஃபிளார் மாவு – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது, - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசலா ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
முட்டை - 2
செய்முறை:
சிக்கனுடன், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, ஃகார்ன் ப்ளார், அரிசிமாவு, மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, முட்டை உடைத்து ஊற்றி, சேர்த்து ஒன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அதன்பிறகு இந்த சிக்கனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பானில், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, முந்திரி பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து, வதக்கிவிட்டு, வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து, அதனுடன் சிக்கனையும் சேர்த்து பிரட்டி எடுத்தால் சுவையான மகாராஜா சிக்கன் ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.