ARTICLE AD BOX
SSMB 29 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தற்போது ராஜமௌலி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக SSMB 29 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாகுபலி 1,2, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படமும் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்தது நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இவ்வாறு இப்படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிசாவில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தலமாலி மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒடிசாவில் நடைபெற்ற இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.