பராசக்தி குழுவினருக்கு விருந்தளித்த சிவகார்த்திகேயன்!

4 days ago
ARTICLE AD BOX

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படக்குழுவினருக்கு விருந்தளித்துள்ளார்.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் இந்தாண்டே திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த பிப். 17 ஆம் தேதி தன் 40-வது பிறந்த நாளை பராசக்தி குழுவினருடன் கொண்டாடினார்.

இதையும் படிக்க: ‘வருகிறோம்...’ மோகன்லாலின் த்ரிஷ்யம் - 3!

இந்த நிலையில், பராசக்தி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்த விடியோவை வெளியிட்ட சுதா கொங்காரா, "பிறந்த நாள்களை நாங்கள் நேசிக்கிறோம். காரணம், எஸ்கேவிடமிருந்து கேக் மற்றும் பிரியாணி கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.

We love happy birthdays cos we get to eat biryani n cake from SK ! #Shootdiaries #Parasakthi pic.twitter.com/kuVXwTnxML

— Sudha Kongara (@Sudha_Kongara) February 20, 2025
Read Entire Article