ARTICLE AD BOX
ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, 11 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 4 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா ஐபிஎஸ் தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன் திருப்பூர் தெற்கு துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேடு காவல் துணை ஆணையராக அதிவீரபாண்டியன், மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக ஆயுஷ் மணி திவாரி ஐபிஎஸ், சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக எச்.எம்.ஜெயராம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில சைபர் கிரைம் எஸ்.பி-யாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி நிர்வாக பிரிவு துணை ஆணையராகவும், ஆவடி மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையராக சங்குவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பாலாஜி, ஆவடி காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல்துறை துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அய்யாசாமி பட்டாலியன் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | ரயில்வே குரூப் டி பணிகள்: மார்ச் 1 வரை விண்ணப்பிக்க அவகாசம்!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஏ.எஸ்.பி ஷானாஸ் ஐபிஎஸ் சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமார் ஐபிஎஸ், எஸ்.பி-ஆக பதவி உயர்வு பெற்று கோவை தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏ.எஸ்.பி சிவராமன் ஐபிஎஸ், எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பி சிபின், எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டு, திருச்சி வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்தார்.
IPS & POLICE - TRANSFERS & POSTINGS#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan@tnpoliceoffl pic.twitter.com/j7isavMPcH
— TN DIPR (@TNDIPRNEWS) February 24, 2025