பயன்படுத்தப்படாத நிலத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பித் தர மத்திய அரசு முடிவு!

5 hours ago
ARTICLE AD BOX

புதுதில்லி: நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால், நிலத்தின் உரிமையாளரிடமே நிலம் திருப்பித் தரும் வகையில், தேசிய நெடுஞ்சாலை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படவில்லை என்றால், தற்போதைய சட்டத்தின் கீழ் அதை அறிவிக்கையிலிருந்து நீக்க எந்த ஏற்பாடும் இல்லை என்றார்.

இதற்கிடையில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் சாலையோர வசதிகள் மேம்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை சட்டத்தில் நிலத்தை அடையாளப்படுத்துவதற்கான தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தில் திருத்தம் தற்போது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் என்றார்.

நாட்டின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய இந்த ஏற்பாடு அவசியம் என்றார்.

இதையும் படிக்க: 90 நாள் இலவச ஹாட்ஸ்டார் சந்தாவை அறிமுகப்படுத்திய ஜியோ!

Read Entire Article