பயணிகள் கவனத்திற்கு; திருப்பதி - காட்பாடி மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

6 hours ago
ARTICLE AD BOX

திருப்பதி - காட்பாடி இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக மகா கும்பமேளாவிற்காக வடக்கு மற்றும் மத்திய ரயில்வேக்கு, தெற்கு ரயில்வே தரப்பில் இருந்து ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சில திருப்பதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisment

ரயில்கள் ரத்து தொடர்பான அறிக்கையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில், "இரவு 7.10 மணிக்கு திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் மார்ச் 13 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 06.10 மணிக்கு காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலானது மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 10.35 மணிக்கு திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில், மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்படுகிறது. மாலை 5.15 மணிக்கு காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில், மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 7.35 மணிக்கு திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில், மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இரவு 9.10 மணிக்கு காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில், மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும், காலை 10.30 மணிக்கு காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயில், மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், பிற்பகல் 12.55 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில், மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article