ARTICLE AD BOX

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் பார்சலில் வெங்காய வெடிகள் இருப்பது தெரியாமல் லாரியில் இருந்து இறக்கும்போது கீழே போட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பலத்த சப்தத்துடன் அந்த வெடிகள் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹைதராபாத்திலிருந்து பார்சலில் விதிகளை மீறி வெடிகளை அனுப்பிய நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.