ARTICLE AD BOX
நடிகர் ஆரவ், அஜித் குறித்து பேசியுள்ளார்.
ஆரவ் தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து இவர், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், கலகத் தலைவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் ஆரவ், அஜித்துடன் இணைந்து பல இடங்களுக்கு பைக் ரைடு சென்றிருக்கிறார். இந்நிலையில் பைக் ரைடு செல்லும்போது நடிகர் அஜித் ஆரவிடம் கூறிய சில விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “சம்பாதிக்கிற பணத்தை சரியாக சேமிக்க வேண்டும். அதே சமயம் சரியான முறையில் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். சேமிக்க வேண்டும் என்பதற்காக வரி கட்டாமல் இருக்கக்கூடாது. பணத்தை பதுக்க கூடாது சம்பாதிக்கிற பணத்தில் வரிக்கு என்று தனியாகவும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்று தனியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைதான் நான் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்று அஜித் தன்னிடம் சொன்னதாக ஆரவ் கூறியுள்ளார்.