பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்... நன்றி தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

22 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதி மந்திரியும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான, ப. சிதம்பரம் அவர்கள், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2025 - 2026 குறித்துப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகக் குறைத்துள்ளதனையும், வருவாய் பற்றாக்குறையை 41,635 கோடியாகக் குறைத்ததையும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார்.

ஒரு அரசின் முதலீட்டு அளவை பொறுத்தே வளர்ச்சி இருக்கும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தனது முதலீட்டு அளவை 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சிறப்பாக வாழ்த்தி உள்ளார். ப.சிதம்பரம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான, மதிப்பிற்குரிய திரு. ப. சிதம்பரம் அவர்கள், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 குறித்துப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகக்…

— Thangam Thenarasu (@TThenarasu) March 16, 2025



Read Entire Article