ARTICLE AD BOX
Tamil Nadu Today News: தமிழக சட்டப்பேரவை மார்ச் 14 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோல மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டங்கள், புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், துறை சார்ந்த அமைப்பினர் நிதித்துறையின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் கூடுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது மார்ச் 14 ஆம் தேதி நடக்கும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தின் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - TN Budget 2025: பட்ஜெட்டில் ஸ்டாலின் போடும் பலே திட்டம்... 2026 தேர்தலே டார்கெட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ