ARTICLE AD BOX
Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.6.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.20 கிலோ எடை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையில் சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,959-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த 31 நாட்களில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.21 குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. அதாவது, ஜனவரி 1ம் தேதி ரூ.14.50 குறைக்கப்பட்டது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post பட்ஜெட் தாக்கல் எதிரொலியா?. சிலிண்டர் விலை குறைந்தது!. எவ்வளவு தெரியுமா? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.