தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் இந்த கடைகள் செயல்படலாம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

3 hours ago
ARTICLE AD BOX

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். எனவே அதற்குப் பிறகும் டீக்கடையை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 24 மணி நேரமும் டீக்கடைகள் செயல்படலாம் என்று அரசாணை இருக்கிறது. அப்படி இருக்கும்போது 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என்று வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினர். அதோடு போலீசார் இரவு 11:00 மணிக்கு டீக்கடையை மூட வேண்டும் என்று நிர்பந்திப்பது ஏற்புடையது அல்ல என்றும் கூறினார். மேலும் டீக்கடையை தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தலாம் என்ற அரசாணை இருப்பதால் அதன்படி நடத்தலாம் என்று கூறினர்.

Read Entire Article