பட்ஜெட் தாக்கலின்போது அமளி: அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

9 hours ago
ARTICLE AD BOX

தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் பட்ஜெட் உரை தொடங்கும்முன்னரே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | தமிழக பேரவை தொடங்கியது! பட்ஜெட் தாக்கல்!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article