ARTICLE AD BOX
Published : 01 Feb 2025 07:49 PM
Last Updated : 01 Feb 2025 07:49 PM
பட்ஜெட் 2025 பிஹார் வாக்காளர்களைக் கவரும் வகையில் மட்டுமே உள்ளது: ப.சிதம்பரம் கருத்து
<?php // } ?>புதுடெல்லி: பட்ஜெட்டில், மொத்த செலவினம் ரூ. 1,04,025 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு ரூ. 92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வி, சுகாதாரம், சமூக நலன், விவசாயம் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், மத்திய பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "2025-26 பட்ஜெட்டின் ஒரு சிறிய விஷயம் என்னவென்றால், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும் பிஹார் வாக்காளர்களையும் பாஜக கவர்ந்திழுக்கிறது. இந்த அறிவிப்புகளை பிஹாரின் 3.2 கோடி வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரும் 7.65 கோடி வாக்காளர்களும் வரவேற்பார்கள்.
அதேநேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, பிரதமர் தலைமையிலான பாஜக உறுப்பினர்களின் இடைவிடாத கைதட்டல்கள் மூலம் நிதியமைச்சர் ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே கூறியுள்ளார்.
முதலில் நடப்பு நிதி ஆண்டான 2024-25-ன் நிதி செயல்திறன் குறித்து பார்ப்பாம். கடந்த பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட வரவு குறித்தும், செலவு குறித்தும் பார்ப்போம். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைவிட, திருத்தப்பட்ட வரி வருவாய் ரூ. 41,240 கோடி குறைந்துள்ளது. திருத்தப்பட்ட நிகர வரி ரூ. 26,439 கோடி குறைந்துள்ளது.
செலவைப் பொறுத்தவரை, மொத்த செலவினம் ரூ. 1,04,025 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு ரூ. 92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துக்கு ரூ. 1,255 கோடி, கல்விக்கு ரூ. 11,584 கோடி, சமூக நலனுக்கு ரூ. 10,019 கோடி, விவசாயத்துக்கு ரூ. 10,992 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ. 75,133 கோடி, நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 18,907 கோடி, வடகிழக்கு மேம்பாட்டுக்கு ரூ. 1,894 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மிகக் கொடூரமாக, SC, ST, OBC மற்றும் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடுகளில் கடுமையான வெட்டுக்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணத்துக்கு, பட்டியல் சமூகத்தினரின் மேம்பாட்டு திட்டமான PM Anysuchit Jaati Abhyuday திட்டத்துக்கு 2024-25 பட்ஜெட்டில் ரூ. 2,140 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரூ. 800 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
OBC, EBC, DNT களுக்கான PM Young Achievers Scholarship திட்டத்துக்கு ரூ.1,836 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.1,381 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
எஸ்சிக்களுக்கான மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்காக 2024-25 நிதி ஆண்டில் ரூ.6,360 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ.5,500 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், எஸ்டிக்களின் மேம்பாட்டுக்கான திட்டத்துக்கு ரூ.4,300 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ.3,630 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை 4.9 சதவீதம் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது 4.8 சதவீதமாக மேம்பட்டுள்ளது. இதில், மகிழ்ச்சியடைய எதுவும் இல்லை. இது பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. பொருளாதாரம் மந்தமாகி வருவதாக நாங்கள் சொன்னபோது எங்களை நம்பாதவர்கள், இப்போது எங்களை நம்புவார்கள் என்று நம்புகிறேன். திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தும் அரசின் திறன் குறைந்துவிட்டதாக நாங்கள் கூறியபோது நம்பாதவர்கள், இப்போது எங்களை நம்புவார்கள் என்று நம்புகிறேன்.
2025-26 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவு ரூ.1,02,661 கோடி அதிகரித்துள்ளது. ஆனால், 2024-25 ஆம் ஆண்டின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, இலக்கை அடைய அரசாங்கத்தின் திறனை நான் சந்தேகிக்கிறேன்.
முந்தைய பட்ஜெட் உரைகளில் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில் அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டது. அரசாங்கத்தின் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. உதாரணத்துக்கு, போஷன், ஜல் ஜீவன் மிஷன், NSAP, PMGSY, பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா மானியம் மற்றும் PM கரிப் கல்யாண் அன்ன யோஜனா ஆகிய திட்டங்களின் செயல் திறன் குறைந்திருப்பதை பார்க்கலாம்.
ரயில்வே துறை பெரும்பாலான மக்களுக்கு சேவை செய்கிறது. ஆனால், ரயில்வேக்கான நிதி சுருக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ரூ. 2,06,961 கோடியாக அறிவிக்கப்பட்டு, பின் அது ரூ. 2,12,786 கோடியாக திருத்தப்பட்டது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ரூ. 2,13,552 கோடியாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டைவிட ரூ. 766 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளிக்கப்பட்ட, மிகவும் பாராட்டப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் (PLI schemes), புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம், திறன் இந்தியா திட்டம் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த திட்டங்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ. 26,018 கோடியாக இருந்தது. ஆனால், ரூ. 15,286 கோடி மட்டுமே உண்மையாக செலவு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சரோ, பிரதமரோ தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையைப் பொருட்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. பொருளாதார ஆய்வறிக்கையில் அவர் விவேகமான ஆலோசனையை வழங்கினார். "வழியை விட்டு வெளியேறு" (“Get out of the way”) என்பது அரசாங்கத்திற்கு அவர் விடுத்த அழைப்பு. மாறாக, பட்ஜெட், புதிய திட்டங்களால் நிறைந்துள்ளது, அவற்றில் பல இந்த அரசாங்கத்தின் திறனுக்கு அப்பாற்பட்டவை.
குறைந்தது 15 புதிய திட்டங்கள் குறித்தும், 4 புதிய நிதி ஒதுக்கீடு குறித்தும் நான் பர்த்தேன். தேய்ந்துபோன பாதையில் நிதியமைச்சர் நடந்து கொண்டிருக்கிறார். 1991 மற்றும் 2004 இல் நாம் செய்தது போல் அவர் சுதந்திரமாக இருக்க விரும்பவில்லை. அவர் கட்டுப்பாடுகளை நீக்க தயாராக இல்லை. தொழில்முனைவோர், MSMEகள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் வழியிலிருந்து விலகிச் செல்ல அவர் தயாராக இல்லை. இந்த பட்ஜெட்டால் அதிகார வர்க்கம் மகிழ்ச்சியடையும்.
முடிவாக, பொருளாதாரம் பழைய பாதையில் செல்லும் என்றும், 2025-26 ஆம் ஆண்டில் வழக்கமான 6 அல்லது 6.5 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக வழங்காது என்றும் நான் கூற விரும்புகிறேன். எங்கள் பார்வையில், எந்த புதிய யோசனைகளும் இல்லாத, பிடியைத் தாண்டிச் செல்லும் விருப்பம் இல்லாத ஒரு அரசாங்கத்தின் பட்ஜெட் இது" என தெரிவித்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ரூ.12 லட்சம் வரை ‘No Tax’, விலை உயரும், குறையும் பொருட்கள்: பட்ஜெட் 2025-ன் டாப் 10 ஹைலைட்ஸ்
- “இது மத்திய அரசின் பட்ஜெட்டா, பிஹார் பட்ஜெட்டா?” - காங்கிரஸ் சரமாரி கேள்வி
- பட்ஜெட் உரையில் திருவள்ளுவர், தெலுங்கு கவிஞரை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!
- சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்