படேல் சிலைக்கு குடியரசு தலைவர் மரியாதை

6 hours ago
ARTICLE AD BOX

ஏக்தா நகர்: குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சர்தார் வல்லபாய் படேல் சிலையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ நேற்று பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். குஜராத் மாநிலத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் நர்மதா மாவட்டத்தின் ஏக்தா நகரை வந்தடைந்தார். இதனை தொடர்ந்து நேற்று காலை அவர் கெவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டார்.

தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேலுக்கு அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சர்தார் சரோவர் அணை, ஜங்கிள் சவாரி பூங்காவையும் பார்வையிட்டார். அணை கட்டுவதற்கான போராட்டங்கள், அணையில் சேகரிக்கக்கூடிய நீரின் அளவு, அன்றைய மின் உற்பத்தி, மாநில மக்கள் அணையால் பெறும் பயன்கள் உள்ளிட்டவை குறித்து குடியரசு தலைவருக்கு விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை அகமதபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் 44வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

The post படேல் சிலைக்கு குடியரசு தலைவர் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article