மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

5 hours ago
ARTICLE AD BOX

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த 20-ஆம் தேதி, மக்கள் தங்களிடம் சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை 7 நாள்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

அதன்படி, காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில், கைத்துப்பாக்கி, அதிநவீன துப்பாக்கி, கையெறி குண்டு, அதன் தோட்டாக்கள் மற்றும் இரண்டு வயர்லெஸ் ஃபோன்கள் மற்றும் பிற பொருள்களை போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.

மேலும், பிஷ்ணுப்பூர் மாவட்டத்துக்குள்பட்ட பௌகாச்சோ இகாய் காவல் நிலையத்திலும் எஸ்பிபிஎல் துப்பாக்கி உள்பட சட்டவிரோத ஆயுதங்களைப் போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.

இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போராட்டக்காரர்கள் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தமாக இதுவரை 109 ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பிப்.13 முதல் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவை இடை நிறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

Read Entire Article