பங்குச்சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் தடுமாற்றம்!

6 hours ago
ARTICLE AD BOX

நமது நிருபா்

ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை தொடங்கிய பங்குச்சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி நிலைத்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை பெரும்பாலான நேரும் ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. முன்பேர வா்த்தகத்தில் மாதாந்திர கணக்கு முடிப்பதற்கு கடைசி நாளானதால் சந்தை தடுமாறியது. மேலும், அந்நிய நிதி வெளியேற்றமும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நிதிநிறுவனங்கள், மெட்டல், தனியார வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி, மீடியா, பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.49 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.393.00 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.3,529.10 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,030.78 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் தடுமாற்றம்: சென்செக்ஸ் காலையில் 104.48 புள்ளிகள் கூடுதலுடன் 74,706.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,834.09 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 74,520.78 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 10.31 புள்ளிகள் (0.01 சதவீதம்) கூடுதலுடன் 74,612.43-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,072 பங்குகளில் 943 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தது. மாறாக 3,030 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 99 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் அல்ட்ராடெக் சிமெண்ட் 4.99 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இது தவிர டாடாமோட்டாா்ஸ், எம் அண்ட் எம், கோட்டக்பேங்க், என்டிபிசி, எஸ்பிஐ உள்பட மொத்தம் 17 பங்குகள் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், பஜாஜ்ஃபின்சா்வ், பஜாஜ்ஃபைனான்ஸ், சன்பாா்மா, ஸொமாட்டோ, டாடாஸ்டீல், நெஸ்லே உள்பட 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 2 புள்ளிகள் குறைவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21.40 புள்ளிகள் கூடுதலுடன் 22,568.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,613.30 வரை மேலே சென்றது. பின்னா், 22,508.40 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 2.50 புள்ளிகள் (0.01 சதவீதம்) இழப்புடன் 22,545.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

Read Entire Article