பங்குச்சந்தை மோசடி வழக்கு | கவுதம் அதானி விடுவிப்பு!

13 hours ago
ARTICLE AD BOX
Published on: 
18 Mar 2025, 3:15 am

அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன்மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பு (எஸ்.எப்.ஐ.ஒ.) 2012-ஆம் ஆண்டு கவுதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. குற்றசதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 2014-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானியை விடுவித்திருந்தது.

bombay high court discharges gautam adani market regulations violation case
கெளதம் அதானிட்விட்டர்

ஆனால் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செசன்சு நீதிமன்றம், மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொழில் அதிபர்கள் 2 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து உத்தரவு தீர்ப்பு வழங்கியது.

bombay high court discharges gautam adani market regulations violation case
ட்ரம்ப் வருகையால் புத்துணர்ச்சி.. அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் அதானி குழுமம்!
Read Entire Article