பங்குச்சந்தை சரிவிலும் 21 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த வாரன் பபெட்.. எப்படி உயர்கிறது ?

9 hours ago
ARTICLE AD BOX
  World

பங்குச்சந்தை சரிவிலும் 21 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த வாரன் பபெட்.. எப்படி உயர்கிறது ?

World

அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உள்ளிட்டவை காரணமாக பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. ஆனால் இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் உலக புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட் தன்னுடைய சொத்தில் 2025 ஆம் ஆண்டில் கூடுதலாக 21 பில்லியன் டாலர்களை சேர்த்து இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடிய அபாயம், பல்வேறு நாடுகள் உடனும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரமற்ற தன்மை உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் ஈக்விட்டி சந்தைகள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. பெரும் நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் சரிவில் இருக்கின்றன. இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட் போலியோவில் கணிசமான தொகையை இழந்துள்ளனர்.

பங்குச்சந்தை சரிவிலும் 21 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த வாரன் பபெட்.. எப்படி உயர்கிறது ?

ஆனால் உலக முதலீட்டாளர்களில் முக்கியமான நபரான வாரன் பஃபெட் 2025 ஆம் ஆண்டில் தன்னுடைய சொத்தில் 21 பில்லியன் டாலர்களை சேர்த்து இருக்கிறார் . பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து பெரு நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்புகள் எல்லாம் சரிவை கண்டிருக்கின்றன. ஆனால் 15 பேரின் சொத்து மதிப்பு மட்டும் இந்த சரிவிலும் உயர்ந்திருக்கிறது, அவர்களில் வாரன் பஃபெட்டும் ஒருவர்.

வாரன் பஃபெட்டை பொறுத்தவரை அவருடைய பெர்க்ஸையர் ஹேத்வே நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்ததே அவருடைய சொத்து மதிப்பு உயர்வதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இந்த பட்டியலில் பெர்னார்டு அர்னால்ட், பில் கேட்ஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

பெர்க்ஸையர் ஹேத்வே என்பது வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான நிதி மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2025 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து தற்போது வரை 16 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கின் மதிப்பு 8 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

Take a Poll

பெர்க்ஸையர் நிறுவனம் கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் சிறந்த லாபத்தை பெற்றிருப்பதும் அதன் காப்பீடு துறை சார்ந்த செயல்பாடுகள் மேம்பட்டு இருப்பதுமே இந்த பங்கு மதிப்பு உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதில் கணிசமான பங்கு வைத்திருப்பதால் வாரன் பஃபெட் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

மேலும் பெர்க்ஸையர் ஹேத்வே நிறுவனம் ரொக்க கையிருப்பாக மற்றும் 325 பில்லியன் டாலர்களை வைத்திருக்கிறது. இதற்கு காரணம் வாரன் பஃபெட் அண்மையில் ஆப்பிள் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனங்களில் வைத்திருந்த கணிசமான அளவு பங்குகளை விற்பனை செய்தார். இந்த நிறுவனம் வசம் இருக்கக்கூடிய இந்த ரொக்க கையிருப்பானது அமெரிக்காவின் பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் ,மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், அமேசான் ,என்விடியா ஆகியவற்றின் மொத்த ரொக்க கையிருப்பை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

Read Entire Article