சுந்தர் பிச்சை-ன்னா சும்மாவா.. ஒரே கையெழுத்தில் 1700 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய கூகுள்..!!

11 hours ago
ARTICLE AD BOX
  World

சுந்தர் பிச்சை-ன்னா சும்மாவா.. ஒரே கையெழுத்தில் 1700 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய கூகுள்..!!

World

அமெரிக்கா: கிளவுட் செக்யூரிட்டி பிரிவில் வலுப்படுத்துவதற்காக கூகுள் நிறுவனம் விஸ் (WIZ) என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இதற்காக 32 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூகுள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. வரலாற்றில் இல்லாத வகையில் கூகுள் நிறுவனம் மொத்தமாக 32 பில்லியன் டாலர்களை ரொக்கமாக கொடுத்து இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.

விஸ் என்பது இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளவுட் செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி செய்கின்றனர். இந்த நிலையில் கூகுள் நிறுவனம் இந்த விஸ் நிறுவனத்தை 32 பில்லியன் டாலர்கள் கொடுத்து கையகப்படுத்தி இருக்கிறது.அதுமட்டுமின்றி தாங்கள் கையகப்படுத்திய பிறகு விஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் தொடர்ந்து அதிலேயே இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்துவதற்காக 2.8 மில்லியன் டாலர்களை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வழங்க இருக்கிறது . இந்திய ரூபாய் மதிப்பில் இது 24 கோடிக்கு சமம்.

சுந்தர் பிச்சை-ன்னா சும்மாவா.. ஒரே கையெழுத்தில் 1700 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய கூகுள்..!!

விஸ் நிறுவனத்திற்கு கொடுத்த விலையில் கணிசமான தொகையை நிறுவன ஊழியர்களும் பெற இருக்கின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் புதிதாக 1700 பணக்காரர்கள் ஒரே நாளில் உருவாகி இருக்கின்றனர். விஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 15 சதவீத ஈக்விட்டி பங்குகள் வழங்கப்படுகிறது என வைத்துக் கொண்டால் ஒவ்வொரு ஊழியரும் 2.8 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவன பங்குகளை சொந்தமாக பெற இருக்கின்றனர்.

இது ஒரு சராசரி கணக்கீடு தான், சில ஊழியர்கள் 10 முதல் 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பு கொண்ட ஈக்விட்டி பங்குகளை பெறுவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளனர். இது தவிர ஒவ்வொரு ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட ஆயிரம் டாலர்களை கூகுள் நிறுவனம் வழங்க உள்ளது. சரியான நிறுவனத்தில் நாம் வேலைக்கு செல்லும் போது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய வளர்ச்சியும் இருக்கும் என்பதையே இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.

கூகுள் நிறுவனம் 2011ஆம் ஆண்டு மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தை 12.5 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. அதற்கு அடுத்ததாக அதிகபட்ச தொகை கொடுத்து கூகுள் நிறுவனம் ஒரு நிறுவனத்தை வாங்குவது இதுவே முதன்முறையாகும். சைபர் செக்யூரிட்டி பிரிவில் தொடங்கப்பட்ட விஸ் நிறுவனம் 18 மாதங்களிலேயே 100 மில்லியன் டாலர்கள் வருமானம் என்ற மைல்கல்லை எட்டியது.

கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு 12 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. கூகுள், ஒராக்கில், அஸ்யூர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இதன் வாடிக்கையாளர்களாக இருந்தனர். சைபர் செக்யூரிட்டி பிரிவில் தன்னை வலுப்படுத்த வேண்டும் என தீவிரம் காட்டும் கூகுள் நிறுவனம் அதன் ஒரு பகுதியாகவே விஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

Read Entire Article