நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

3 hours ago
ARTICLE AD BOX

நெல்லை : நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது தச்சநல்லூர் அருகே உள்ள அழகநேரியை சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி வள்ளி (48) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மகள் ரம்யாவை அழைத்து கொண்டு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் சோதனைக்கு நின்ற போலீசாரிடம் தனது கைப்பையை மட்டும் காட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர் பூங்கா அருகே திடீரென தனது சேலைக்குள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் அங்கு ஓடிச் சென்று தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீர் ஊற்றி ஓரிடத்தில் அமர வைத்தனர்.

தீக்குளிக்க முயன்றது குறித்து வள்ளி போலீசாரிடம் கூறுகையில், ‘‘நானும், எனது கணவரும் மீன் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு சொந்தமான வீட்டை உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். தொடர்ந்து நாங்கள் முறையீட்டும் எங்களுக்கே சொந்தம் எனக்கூறி வீட்டை தர மறுக்கின்றனர்.

இதுதொடர்பாக தலையாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் வாழ்க்கை வெறுத்துப் போய் தீக்குளிக்க முயன்றேன்’’ என்றார். கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் சேலைக்குள் மறைத்து வைத்து மண்ணெண்ணெய் பாட்டிலை கொண்டு சென்று அவர் தீக்குளிக்க முயன்றது பர
பரப்பை ஏற்படுத்தியது.

The post நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article