ARTICLE AD BOX
காலநிலை மாற்றம் நிகழ்ந்து வரும் இந்த சூழலில் சிலருக்கு அடிக்கடி சளி, இருமல் பிரச்சனை ஏற்படும். அப்படி இருப்பவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை என்று கூறுவார்கள். ஆனால் ரசம் குடித்தால் சரியாகிவிடும். அப்படி ரச வகைகளில் மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் போன்றவை இருக்கும் நிலையில் நண்டு ரசம் எவ்வாறு செய்யலாம் என்று சாஜி சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
மிளகு
சீரகம்
காய்ந்த மிளகாய்
பூண்டு
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
நண்டு
புளி கரைசல்
மஞ்சள் தூள்
எண்ணெய்
கடுகு
தக்காளி
கொத்தமல்லி
செய்முறை
தேவையான அளவு மிளகு, சீரகம், காயந்த மிளகாய், பூண்டு சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது நண்டை தட்டி சாறு எடுத்து கொள்ளவும்.
அடுத்ததாக ரசம் செய்ய அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூள் மற்றும் இடித்து வைத்த மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
சளிக்கு இந்த நண்டு ரசம் சாப்பிடுங்க
இப்போது தக்காளியை பிளிந்து சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து இடித்த நண்டு மற்றும் சாறு சேர்க்கவும். பின்னர் புளி தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வந்த உடன், கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை நுரை கட்டியதும் இறக்கினால் அவ்வளவு தான் ருசியான நண்டு ரசம் ரெடியாகிவிடும்.
நண்டு ரசம் சளி, இருமல் இவற்றிற்கு நிரந்தர தீர்வு அளிப்பதோடு செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.