நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலி.. கார் மீது திடீரென மோதிய லாரி.. என்ன நடந்தது?

3 days ago
ARTICLE AD BOX

நூலிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலி.. கார் மீது திடீரென மோதிய லாரி.. என்ன நடந்தது?

India
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மாஜி பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் கார் விபத்தில் சிக்கியது. சாலையில் திடீரென்று குறுக்கே வந்த லாரி அவரது கார் மீது மோதியதால் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் சவுரவ் கங்குலி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ரசிகர்களாக தாதா என அழைக்கப்படும் கங்குலி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு அவர் பிசிசிஐ-யின் தலைவராகவும் செயல்பட்டார்.

sourav ganguly accident cricket

இந்நிலையில் தான் நேற்று இரவு சவுரவ் கங்குலி தனது ‛ரேஞ்ச் ரோவர்' காரில் மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். ் ஹுக்ளி புறநகர் பகுதியில் அவரது கார் சென்று கொண்டிருந்தார். ் அப்போது திடீரென்று குறுக்கே வந்த லாரி அவரது கார் மீது மோதியது.

இதில் சவுரவ் கங்குலியின் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக கங்குலிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவரது கார் டிரைவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து சவுரங் கங்குலி இன்னொரு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
English summary
Former Indian cricke capain Sourav Ganguly car was involved in an accident in West Bengal. However Ganguly remained unharmed and continued with his scheduled program without any distuptions.
Read Entire Article